Saturday, October 18, 2008

<< ஏதிலியாய் உம்மை விட்டு விடுவோமா! >>


தொப்புள்க்கொடி உறவுகள்
நாம் புலத்தில் வாழ்கையிலே
ஏதிலியாய் உம்மை நாம் விட்டு விடுவோமா!

எவர் தடை விதித்தாலும்
உமை காக்க என்றும் வீறுகொண்டு
எழுவோம் நாம் வீறுகொண்டு எழுவோமே!

உங்கள் அவலங்களை
எண்ணும் பொழுதினிலே
எம் விழியில் இரத்த ஆறு ஓடுகின்றதே!

தமிழீழத்தை திரும்பி பார்க்க
இவ்வுலகு தவறியதேன்?
தமிழரின் உயிர் என்ன அவ்வளவு இழிந்ததா!

வந்தோரை உபசரித்தோர்
இன்று ஒரு பிடி சோறு கூட
இல்லாமல் தவிக்கின்றார்களே!

ஆண்டவர்கள் இன்று
மர நிழலில் கூட வாழ முடியாமல்
துடிக்கின்றார்களே!

என்ன உலகுக்கு ஓர் நீதி
தமிழனுக்கு ஓர் நீதியா!

தமிழீழம் விடியுமென
உலகத் தமிழரின் விழிகள்
காத்திருக்க கொடுமைகள்
இன்னும் தமிழீழத்தில் தொடர்கின்றதே!

தமிழீழம் விடிகையில்
தமிழரின் வாழ்வு சிறக்கும்
அடிமை நிலையும் சிதறியுடையும்!
-
பா. லக்ஷன்
லண்டோவ்
யேர்மனி
*****

No comments: