Monday, October 6, 2008

<< தாயெனும் தெய்வ‌ம் >>


க‌ருவிலிருந்து
ஈரைந்து மாத‌ம் சும‌ந்து
என்னை ஈன்ற‌வ‌ள்.

குழ‌ந்தையாய் இருக்கையில்
பேருந்து ப‌ய‌ண‌த்திலும்
மார்போடு அணைத்து
என‌க்கு பாலூட்டிய‌வள்.

வயலுக்கு செல்கையில்
தலையில் சோற்றுக்குவளையுடன்
இடுப்பில் என்னையும்
சுமந்து சென்றவள்.

பள்ளி செல்கையில்
நான் செய்த தவறுகளுக்காக‌
அப்பாவிடம் அடிவாங்காமல்
என்னை காப்பாற்றி அடிவாங்குபவள்

கல்லூரி பயில்கையில்
வீட்டிலிருந்து கல்லூரிக்கு
கிளம்பும்போதுஅப்பாவுக்கு
தெரியாமல் செலவுக்கு பணம்
கொடுத்தனுப்புபவள்.

நான் கல்லூரியிலிருந்து
தொலைபேசியில் உன்னிடம் பேசுகையில்
நீ முதலில் என்னிடம் கேட்பதுநீ எப்ப
ஊருக்கு வருவாய்யென்பவ‌ள்.

விடுமுறை முடித்து
நான் கல்லூரிக்கு கிளம்பும்போது
பேருந்து நிறுத்தம் வரை வந்து
பேருந்தினுள் ஏற்றி
விட்டு வழியனுப்பி செல்பவள்.

எனக்கு வயது இருபத்தைந்து
ஆன போதிலும்என்னை உன்
கூட வேப‌டுத்துறங்க‌ சொல்ப‌வ‌ள்.

எவ‌ரிட‌மும் கிடைப்ப‌தில்லை
இத்த‌னை பாச‌ங்க‌ளும்
தாய் எனும் தெய்வ‌த்தை த‌விர‌...


க. அசோக்குமார்,
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்
கோயம்புத்தூர் -3.
*****

for contact: s.jeeva@hotmail.fr

No comments: