Saturday, October 18, 2008

<< ஏதிலியாய் உம்மை விட்டு விடுவோமா! >>


தொப்புள்க்கொடி உறவுகள்
நாம் புலத்தில் வாழ்கையிலே
ஏதிலியாய் உம்மை நாம் விட்டு விடுவோமா!

எவர் தடை விதித்தாலும்
உமை காக்க என்றும் வீறுகொண்டு
எழுவோம் நாம் வீறுகொண்டு எழுவோமே!

உங்கள் அவலங்களை
எண்ணும் பொழுதினிலே
எம் விழியில் இரத்த ஆறு ஓடுகின்றதே!

தமிழீழத்தை திரும்பி பார்க்க
இவ்வுலகு தவறியதேன்?
தமிழரின் உயிர் என்ன அவ்வளவு இழிந்ததா!

வந்தோரை உபசரித்தோர்
இன்று ஒரு பிடி சோறு கூட
இல்லாமல் தவிக்கின்றார்களே!

ஆண்டவர்கள் இன்று
மர நிழலில் கூட வாழ முடியாமல்
துடிக்கின்றார்களே!

என்ன உலகுக்கு ஓர் நீதி
தமிழனுக்கு ஓர் நீதியா!

தமிழீழம் விடியுமென
உலகத் தமிழரின் விழிகள்
காத்திருக்க கொடுமைகள்
இன்னும் தமிழீழத்தில் தொடர்கின்றதே!

தமிழீழம் விடிகையில்
தமிழரின் வாழ்வு சிறக்கும்
அடிமை நிலையும் சிதறியுடையும்!
-
பா. லக்ஷன்
லண்டோவ்
யேர்மனி
*****

Wednesday, October 8, 2008

<< அன்னையே தெய்வம் >>


தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன
என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து என்னைக்
கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்

இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாய்
பிறக்கலாம் உனக்கு நான்

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
உன் எல்லா குழந்தைக்கும்
ஒரே அளவிலான அன்பையே
காட்டுகிறாயே

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்
நான் பிறக்க நீ
தாங்கிய பிரசவ
வலியை

உன்னில் தடுக்கி
நான் விழுந்தபோதும்
உன் பக்தனாய்
அம்மா என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்

நான்
பார்த்திருக்கிறேன்
உன் கண்வலிக்காக
அழாமல்
என் மேல் விழுந்த
தூசிக்காய் நீ கண்ணீர்
சிந்தியதை
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை
தட்டி விட்டிருக்கிறேன்

இன்று
ரொம்பப் பசிக்கிது
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா

கௌசி
Norway.
***
for contact: s.jeeva@hotmail.fr

Monday, October 6, 2008

<< ஒட்டுக்குழுக்கள் >>


பணம் என்னும் ஆசையால் வந்த ஒட்டுக்குழுக்கள்
பதவி என்னும் ஆசையால் வந்த ஒட்டுக் குழுக்கள்
காமம் என்னும் ஆசையால் வந்த ஒட்டுக் குழுக்கள்
மீட்பர்கள் எனச் சொல்லும் ஒட்டுக்குழுக்கள்
நாளும் அழிகிறது இவர்களால் தமிழினம்

உலகத்தமிழினம் இதைப்பார்த்து மனம் நோகிறது
களத்திலே வீரமறவர்கள் பகை விரட்ட
ஒட்டுத் தமிழ் குழுக்கள் பகைவனை
ஒட்டி தமிழனை அழிக்கிறார்கள்

வகை வகையான ஒட்டுக்குழுக்கள் பாருங்கள் ஐயகோ
தாங்க முடியவில்லை இவர்களின் பரிகாசம்
எனினும் இவர்களுக்கு எங்கள் வேங்கைகள்
நாளுக்கு நாள் தீர்ப்பு எழுதுகிறார்கள் எனினும்
ஒட்டி வாழ்வதனால் விதி அதிககாலம் எழுதப்படுகிறது
நிச்சயமாக இவர்களுக்கு எதிர்காலம் பதில் சொல்லும்
தலைவனின் சுட்டுவிரல் அசைவுளில்
_
_
நிஷா வசி
*****
for contact: s.jeeva@hotmail.fr

<< தாயெனும் தெய்வ‌ம் >>


க‌ருவிலிருந்து
ஈரைந்து மாத‌ம் சும‌ந்து
என்னை ஈன்ற‌வ‌ள்.

குழ‌ந்தையாய் இருக்கையில்
பேருந்து ப‌ய‌ண‌த்திலும்
மார்போடு அணைத்து
என‌க்கு பாலூட்டிய‌வள்.

வயலுக்கு செல்கையில்
தலையில் சோற்றுக்குவளையுடன்
இடுப்பில் என்னையும்
சுமந்து சென்றவள்.

பள்ளி செல்கையில்
நான் செய்த தவறுகளுக்காக‌
அப்பாவிடம் அடிவாங்காமல்
என்னை காப்பாற்றி அடிவாங்குபவள்

கல்லூரி பயில்கையில்
வீட்டிலிருந்து கல்லூரிக்கு
கிளம்பும்போதுஅப்பாவுக்கு
தெரியாமல் செலவுக்கு பணம்
கொடுத்தனுப்புபவள்.

நான் கல்லூரியிலிருந்து
தொலைபேசியில் உன்னிடம் பேசுகையில்
நீ முதலில் என்னிடம் கேட்பதுநீ எப்ப
ஊருக்கு வருவாய்யென்பவ‌ள்.

விடுமுறை முடித்து
நான் கல்லூரிக்கு கிளம்பும்போது
பேருந்து நிறுத்தம் வரை வந்து
பேருந்தினுள் ஏற்றி
விட்டு வழியனுப்பி செல்பவள்.

எனக்கு வயது இருபத்தைந்து
ஆன போதிலும்என்னை உன்
கூட வேப‌டுத்துறங்க‌ சொல்ப‌வ‌ள்.

எவ‌ரிட‌மும் கிடைப்ப‌தில்லை
இத்த‌னை பாச‌ங்க‌ளும்
தாய் எனும் தெய்வ‌த்தை த‌விர‌...


க. அசோக்குமார்,
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்
கோயம்புத்தூர் -3.
*****

for contact: s.jeeva@hotmail.fr

Friday, October 3, 2008

<< தமிழீழம் >>



தரணி போற்றிடும் தனிப்புகழ் கொண்டது தமிழீழம்
தன்னிகரிலாத் தலைவனைக் கொண்டது தமிழீழம்
பழமை போற்றும் தமிழ்மொழி கொண்டது தமிழீழம்
பார் போற்றிடும் பண்பாடு கொண்டதும் தமிழீழம்
கனிய வளங்கள் பலவும் கொண்டது தமிழீழம்
கடல் வளமும் கூடவே கொண்டதும் தமிழீழம்

இத்தனைக்கும் மேலாக என்தாய் பிரசவித்ததும்
தமிழீழமல்லவா?
என் தாய் மண்ணை ஆக்கிரமிக்கும் - எதிரியின்
இன அழிப்பில் என்தாயும் கண்ணீர் வடிக்கிறாள்...

தமிழீழம் மீட்கும் எம் தவப்புதல்வர்களுக்கு
நாங்களும் உதவிடுவோம் - எம் உறவுகளே….

கீர்த்திகா
Paris
****

for contact: s.jeeva@hotmail.fr

<< கரிய புலி வேங்கைகளே……>>



நினைத்துப் கூடப் பார்க்க முடியவில்லை
உங்கள் வீரத்தினை...

நெஞ்சு வெடிக்கும் போல் உள்ளது
உங்கள் துணிவை நினைக்கும் போது…..

கவிதை கூட எழுத முடியவில்லை
கண்மணிகள் உங்கள் வீரத்தின் முன்னால்…

உயிரிலும் மேலானது ஈழம் என்பதை
உங்கள் உயிராயுததால் மரியாதை செலுத்துகின்றீர்கள்

விடை பெறும் வேளையில் கூட நாம்
கலங்கக்கூடாதுஎன்பதற்காக புன்னகைக்கும்
புன்னகை வீரர்களே...

கரும் புலி வீரர்களே மாவீரர்களே - நீங்கள்
மலரப்போகும் ஈழத்தின் விடிவெள்ளிகளாக
ஈழத்தாயின் அக்கினிக் குழந்தைகளாக
என்றென்றும் உங்கள் ஈழத்தில்
உங்கள் உறவுகள் மனங்களில் வாழ்வீர்கள்…

மதுசிகா
யாழ்பாணம்
*****
for contact: s.jeeva@hotmail.fr

<< கேணல் ராயு >>



அயராது உழைத்தீர்கள் அண்ணா
ஆட்லறிப் படையணியுடன் பொறியியல் வளர
இன்றுன் இழப்பிற்கு
ஈடிணை எதுவுமில்லை அண்ணா
உன் தியாகங்கள் ஒவ்வொன்றும்
ஊரறியாது ஒருபோதும் அண்ணா
என்றென்றும் உன் நினைவுகளை
ஏற்றுகின்றோம் எம் இதையங்களில் அண்ணா
ஐயமில்லை உன் கனவு – விரைவில்
ஒரு நாள் ஈடேறும் அண்ணா
ஓங்கி ஒலித்திடும் இலட்சிய வீச்சு
– உன் இழப்பின் காயத்திற்கு
ஒளடதம் ஆகிடுமே அண்ணா!

மது
தமிழீழம்
*****
for contact: s.jeeva@hotmail.fr

Wednesday, October 1, 2008

<< ஏழைத் தாய் >>



ஓலைக் குடிசை ஒன்றில்
ஏழைத் தாய் ஒருத்தி
ஊள்ளிருந்தே பிள்ளைக்கு
உணவூட்டினாள்

திடீரென மழை பெய்தது
கலக்கமடைந்த அந்த தாய்
தன்னையே கூடாரமாக்கினாள்
தன் பிள்ளைக்காக

ஆனாலும் பிள்ளை நனைந்தது
மழை நீரால் அல்ல

அவ் ஏழைத் தாயின் கண்ணீரால்…….
_
சி.ஜீவா
வத்திரான்
*****
for contact: s.jeeva@hotmail.fr